ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
|ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இதுவரை 55 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
புதுடெல்லி,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக தலா 2 முறையும், 4 அணிகளுக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 4 இடங்களை வகிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை 55 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 15 லீக் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனாலும் இன்னும் எந்த அணியும் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யவில்லை. இதனால் நீயா-நானா? போட்டி கடுமையாகியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சும், டெல்லி கேப்பிட்டல்சும் மோதுகின்றன. பிளே-ஆப் வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்திக் கொள்ளும் உத்வேகத்துடன் ராஜஸ்தான் வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். அவர்களின் அதிரடி ஜாலத்துக்கு டெல்லி அணி முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.