< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி - லக்னோ அணிகள் இன்று மோதல்
|12 April 2024 6:01 AM IST
இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.
லக்னோ,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.
நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.
டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.