< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
'ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எங்கள் வாழ்க்கையை மாற்றியது' - தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ்
|30 Dec 2022 10:15 PM IST
தென் ஆப்பிரிக்க லீக் டி-20 கிரிக்கெட் தொடரை இளம் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டிவில்லியர்ஸ் கேட்டுக் கொண்டார்.
கேப் டவுன்,
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைப் போன்று வரும் 10-ந்தேதி முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இது குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் டிவில்லியர்ஸ், மிகச்சரியான நேரத்தில் தென் ஆப்பிரிக்க லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இளம் வீரர்கள் இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், ஐ.பி.எல். தங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றியது என்று தெரிவித்தார்.