< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

Image Courtesy: @ChennaiIPL

கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

தினத்தந்தி
|
3 March 2024 12:18 AM IST

ஐ.பி.எல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சி.எஸ்.கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது.

சென்னை,

ஐ.பி.எல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சி.எஸ்.கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது.

இன்னும் ஓரிரு வாரங்களில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மையில் முகேஷ் அம்பானியின் மகனின் இல்லத் திருமண நிழ்ச்சியில் தோனி அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். அவர் விரைவில் சென்னைக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் வரும் 22ம் தேதி சென்னையில் மோத உள்ளன.


மேலும் செய்திகள்