< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.: சென்னை, கொல்கத்தா 4-வது வெற்றி... புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: சென்னை, கொல்கத்தா 4-வது வெற்றி... புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

தினத்தந்தி
|
15 April 2024 11:52 AM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் கொல்கத்தா , சென்னை அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இதில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி கொல்கத்தாவும், இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னையும் வெற்றி பெற்றன. இது 2 அணிகளுக்கும் 4-வது வெற்றியாக பதிவானது.

29 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து காண்போம்...

6 போட்டிகளில் விளையாடி அதில் ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா 2-வது இடத்திலும், சென்னை 3-வது இடத்திலும் உள்ளன.

தலா 6 புள்ளிகள் பெற்ற நிலையில், ரன் ரேட் அடிப்படையில் ஐதராபாத் 4-வது இடத்திலும், லக்னோ 5-வது இடத்திலும், குஜராத் 6-வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப், மும்பை மற்றும் டெல்லி அணிகள் முறையே தலா 4 புள்ளிகளுடன் 7,8 மற்றும் 9-வது இடத்தில் உள்ளன. 6 போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வெற்றி மட்டுமே கண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது.

மேலும் செய்திகள்