ஐ.பி.எல்: சென்னை - குஜராத் அணிகள் நாளை மோதல்
|சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மசாலா,
17-வது ஐ.பி.எல், . தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில்,ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் , குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில் தலைமையிலான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.