< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.: சென்னை, பெங்களூரு வெற்றி... புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: சென்னை, பெங்களூரு வெற்றி... புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

தினத்தந்தி
|
13 May 2024 5:46 AM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை, பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்னும் லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ராஜஸ்தான் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது.

மற்ற அணிகளில் மும்பை, பஞ்சாப் அணிகள் அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டன. மீதமுள்ள அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன. இதனால் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளன.

இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்சும், டெல்லியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றன.

இதுவரை நடைபெற்று முடிவடைந்துள்ள 62 லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் கொல்கத்தா, ராஜஸ்தான், சென்னை (1 இடம் முன்னேற்றம்), ஐதராபாத் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன. மற்ற இடங்களில் முறையே பெங்களூரு (5-வது இடம்) (1 இடம் முன்னேற்றம்), டெல்லி (6-வது இடம்), லக்னோ (7-வது இடம்), குஜராத் (8-வது இடம்), மும்பை (9-வது இடம்) மற்றும் பஞ்சாப் (10-வது இடம்) அணிகள் உள்ளன.

மேலும் செய்திகள்