< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.: சென்னை, பெங்களூரு அணிகள் வெற்றி...புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: சென்னை, பெங்களூரு அணிகள் வெற்றி...புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?

தினத்தந்தி
|
29 April 2024 2:33 PM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை, பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 46 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூருவும், ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னையும் வெற்றி பெற்றன.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்திற்கு முன்னேறி அசத்தி உள்ளது. ஏற்கனவே புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த ஐதராபாத் 4-வது இடத்திற்கும், 4-வது இடத்தில் இருந்த லக்னோ 5-வது இடத்திற்கும் சரிந்துள்ளன. பெங்களூரு அணியை பொறுத்தவரை வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இதில் 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் முதலிடத்திலும், கொல்கத்தா 10 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. 5 அணிகள் 10 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் அவை ரன் ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்