ஐ.பி.எல்; குஜராத் - சி.எஸ்.கே போட்டிக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
அகமதாபாத்,
ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 231 ரன்கள் குவித்தது.
குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர். சென்னை தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் குஜராத் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. இந்த வெற்றிக்கு முன்னர் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த குஜராத் அணி தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி 8வது இடத்திற்கு வந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் சென்னை அணி ரன் ரேட் அடிப்படையில் 4வது இடத்தில் நீடிக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் கொல்கத்தா அணியும், 2வது இடத்தில் ராஜஸ்தான் அணியும், 3வது இடத்தில் ஐதராபாத் அணியும் உள்ளன.
59வது லீக் ஆட்டம் வரையிலான புள்ளிப்பட்டியல் விவரம்;
1.) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 11 ஆட்டம் - 8 வெற்றி - 3 தோல்வி - 16 புள்ளி (+1.453 ரன் ரேட்)
2. ராஜஸ்தான் ராயல்ஸ் - 11 ஆட்டம் - 8 வெற்றி - 3 தோல்வி - 16 புள்ளி (+0.476 ரன் ரேட்)
3.) சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 12 ஆட்டம் - 7 வெற்றி - 5 தோல்வி - 14 புள்ளி (+0.406 ரன் ரேட்)
4.) சென்னை சூப்பர் கிங்ஸ் - 12 ஆட்டம் - 6 வெற்றி - 6 தோல்வி - 12 புள்ளி (+0.491 ரன் ரேட்)
5.) டெல்லி கேப்பிடல்ஸ் - 12 ஆட்டம் - 6 வெற்றி - 6 தோல்வி - 12 புள்ளி (-0.316 ரன் ரேட்)
6.) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 12 ஆட்டம் - 6 வெற்றி - 6 தோல்வி - 12 புள்ளி (-0.769 ரன் ரேட்)
7.) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 12 ஆட்டம் - 5 வெற்றி - 7 தோல்வி - 10 புள்ளி (+0.217 ரன் ரேட்)
8.) குஜராத் டைட்டன்ஸ் - 12 ஆட்டம் - 5 வெற்றி - 7 தோல்வி - 10 புள்ளி (-1.063 ரன் ரேட்)
9.) மும்பை இந்தியன்ஸ் (E) - 12 ஆட்டம் - 4 வெற்றி -8 தோல்வி - 8 புள்ளி (-0.212 ரன் ரேட்)
10.) பஞ்சாப் கிங்ஸ் (E) - 12 ஆட்டம் - 4 வெற்றி -8 தோல்வி - 8 புள்ளி (-0.423 ரன் ரேட்)