< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் புதிய ஜெர்சி வெளியானது
கிரிக்கெட்

ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் புதிய ஜெர்சி வெளியானது

தினத்தந்தி
|
19 March 2024 6:38 PM IST

ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது

பெங்களூரு,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், 2024 ஐ.பி.எல். தொடருக்கான பெங்களூரு அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு அணியின் புதிய ஜெர்சியின் புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்