ஐ.பி.எல் : குஜராத் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
|டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை அகமதாபாத்தில் நடைபெறும் 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது
குஜராத் :
விருத்திமான் சாஹா, சுப்மன் கில்(கேப்டன் ), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா.
பெங்களூரு:
விராட் கோலி, டு பிளெசிஸ்(கேப்டன் ), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங், கர்ண் சர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்.