< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். ஏலம்: ரூ.167 கோடிக்கு ஏலம் போன 80 வீரர்கள் - விவரம்...!
கிரிக்கெட்

ஐ.பி.எல். ஏலம்: ரூ.167 கோடிக்கு ஏலம் போன 80 வீரர்கள் - விவரம்...!

தினத்தந்தி
|
24 Dec 2022 6:28 AM IST

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் 80 வீரர்கள் மொத்தம் ரூ.167 கோடிக்கு விற்கப்பட்டனர்.

கொச்சி,

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் கொச்சியில் நேற்று நடந்தது. ஏலப்பட்டியலில் 405 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இது மினி ஏலம் என்ற போதிலும் ஒரு சில அணிகள் கணிசமான தொகையை ஒருசேர வெளிநாட்டு வீரர்கள் மீது முதலீடு செய்து மலைக்க வைத்தன. அந்த வகையில் சாம் கார்ரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நிகோலஸ் பூரன் உள்ளிட்டோர் ரூ.16 கோடியை தாண்டினர்.

இந்த ஏலத்தில் மொத்தம் 87 வீரர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இதில் மொத்தம் 80 வீரர்கல் அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதி எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிகளுக்கு ஏலம் போனார்கள் என பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:-

பென் ஸ்டோக்ஸ்-ரூ.16¼ கோடி

கைல் ஜாமிசன்- ரூ.1 கோடி

நிஷாந்த் சிந்து- ரூ.60 லட்சம்

ரஹானே- ரூ.50 லட்சம்

பகத் வர்மா- ரூ.20 லட்சம்

அஜய் மண்டல்-ரூ.20 லட்சம்

ஷேக் ரஷீத்- ரூ.20 லட்சம்

டெல்லி கேபிட்டல்ஸ்:-

முகேஷ்குமார்- ரூ.5½ கோடி

ரோசவ்- ரூ.4.6 கோடி

மனிஷ் பாண்டே- ரூ.2.4 கோடி

பில் சால்ட்- ரூ.2 கோடி

இஷாந்த் ஷர்மா- ரூ.50 லட்சம்

குஜராத் டைட்டன்ஸ்:-

ஷிவம் மாவி-ரூ.6 கோடி

ஜோஷூவா லிட்டில்-ரூ.4.4 கோடி

வில்லியம்சன்- ரூ.2 கோடி

கே.எஸ்.பரத்- ரூ.1.2 கோடி

மொகித் ஷர்மா- ரூ.50 லட்சம்

ஒடியன் சுமித்- ரூ.50 லட்சம்

உர்வில் பட்டேல்- ரூ.20 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-

ஷகிப் அல்-ஹசன்- ரூ.1½ கோடி

டேவிட் வைஸ்- ரூ.1 கோடி

என்.ஜெகதீசன்- ரூ.90 லட்சம்

வைபப் அரோரா- ரூ.60 லட்சம்

மன்தீப்சிங்- ரூ.50 லட்சம்

லிட்டான் தாஸ்- ரூ.50 லட்சம்

குல்வந்த் கெஜ்ரோலியா- ரூ.20 லட்சம்

சுயாஷ் ஷர்மா- ரூ.20 லட்சம்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-

நிகோலஸ் பூரன்- ரூ.16 கோடி

டேனியல் சாம்ப்ஸ்- ரூ.75 லட்சம்

அமித் மிஸ்ரா- ரூ.50 லட்சம்

ரொமாரியா ஷெப்பார்டு- ரூ.50 லட்சம்

நவீன் உல்-ஹக்- ரூ.50 லட்சம்

ஜெய்தேவ் உனட்கட்- ரூ.50 லட்சம்

யாஷ் தாக்குர்- ரூ.45 லட்சம்

ஸவப்னில் சிங்- ரூ.20 லட்சம்

யுத்விர் சாரக்- ரூ.20 லட்சம்

பிரேராக் மன்கட்- ரூ.20 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்:-

கேமரூன் கிரீன்-ரூ.17½ கோடி

ஜய ரிச்சர்ட்சன்- ரூ.1½ கோடி

பியுஷ் சாவ்லா- ரூ.50 லட்சம்

நேஹல் வாதேரா- ரூ.20 லட்சம்

ராகவ் கோயல்- ரூ.20 லட்சம்

விஷ்ணு வினோத்- ரூ.20 லட்சம்

ஜேன்சன்- ரூ.20 லட்சம்

ஷம்ஸ் முலானி- ரூ.20 லட்சம்

பஞ்சாப் கிங்ஸ்:-

சாம் கர்ரன்- ரூ.18½ கோடி

சிகந்தர் ராசா- ரூ.50 லட்சம்

ஹர்பிரீத் பாட்டியா- ரூ.40 லட்சம்

ஷிவம் சிங்- ரூ.20 லட்சம்

வித்வத் காவேரப்பா- ரூ.20 லட்சம்

மொகித் ராதீ- ரூ.20 லட்சம்

ராஜஸ்தான் ராய்லஸ்:-

ஜாசன் ஹோல்டர்- ரூ.5¾ கோடி

ஆடம் ஜம்பா- ரூ.1½ கோடி

ஜோ ரூட்- ரூ.1 கோடி

டோனோவன் பெரைரா- ரூ.50 லட்சம்

கே.எம்.ஆசிப்- ரூ.30 லட்சம்

பி.ஏ.அப்துல்- ரூ.20 லட்சம்

ஆகாஷ் வஷிசிட்- ரூ.20 லட்சம்

குணால் ரத்தோர்- ரூ.20 லட்சம்

முருகன் அஸ்வின்- ரூ.20 லட்சம்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:-

வில் ஜாக்ஸ்- ரூ.3.2 கோடி

ரீஸ் டாப்லே- ரூ.1.9 கோடி

ராஜன் குமார்- ரூ.70 லட்சம்

அவினாஷ் சிங்- ரூ.60 லட்சம்

சோனு யாதவ்- ரூ.20 லட்சம்

ஹிமான்ஷூ ஷர்மா- ரூ.20 லட்சம்

மனோஜ் பண்டாகே- ரூ.20 லட்சம்

ஐதராபாத் சன் ரைசர்ஸ்:-

ஹாரி புரூக்- ரூ.13¼ கோடி

மயங்க் அகர்வால்- ரூ.8¼ கோடி

ஹென்ரிச் கிளாசென்- ரூ.5¼ கோடி

விவ்ராந்த் ஷர்மா- ரூ.2.6 கோடி

அடில் ரஷித்- ரூ.2 கோடி

மயங்க் தாகர்- ரூ.1.8 கோடி

அகில் ஹூசைன்- ரூ.1 கோடி

மயங்க் மார்கண்டே- ரூ.50 லட்சம்

உபேந்திர சிங் யாதவ்- ரூ.25 லட்சம்

சன்விர்சிங்- ரூ.20 லட்சம்

அன்மோல்பிரீத் சிங்- ரூ.20 லட்சம்

சமர்த் வியாஸ்- ரூ.20 லட்சம்

நிதிஷ்குமார் ரெட்டி- ரூ.20 லட்சம்

மேலும் செய்திகள்