< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்; ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரருக்கு அபராதம் - காரணம் என்ன..?

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஐ.பி.எல்; ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரருக்கு அபராதம் - காரணம் என்ன..?

தினத்தந்தி
|
25 May 2024 6:29 AM GMT

ராஜஸ்தான் அணியின் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ஷிம்ரன் ஹெட்மயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ஷிம்ரன் ஹெட்மயருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் அவர் ஐ.பி.எல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்