< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். வரலாற்றில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா
கிரிக்கெட்

ஐ.பி.எல். வரலாற்றில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா

தினத்தந்தி
|
19 May 2024 9:05 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 66 ரன்கள் குவித்தார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரின் 69-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசெனின் அதிரடி மூலம் 19.1 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 5 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்தார்.

இந்த ஆட்டத்தில் அவர் அடித்த 5 சிக்சர்களையும் சேர்த்து நடப்பு சீசனில் அவர் அடித்த சிக்சர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. இதன் மூலம் 17 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக 2016 சீசனில் விராட் கோலி 38 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. அபிஷேக் சர்மா - 41 சிக்சர்கள்

2. விராட் கோலி - 38 சிக்சர்கள்

3. ரிஷப் பண்ட்/ விராட் கோலி - 37 சிக்சர்கள்

4. ஷிவம் துபே - 35 சிக்சர்கள்

மேலும் செய்திகள்