ஐ.பி.எல்.: புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்... ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிகளின் பட்டியலில் யார் முதலிடம்?
|நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 13 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன
சென்னை,
17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 13 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரின் புள்ளி பட்டியல், ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பிகளுக்கான பட்டியலில் வீரர்களின் நிலை ஆகியவற்றின் விவரம் பின்வருமாறு:-
புள்ளி பட்டியல்:
அதில் சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி முதலிடத்தில் உள்ளது. மற்ற அணிகளில் சில தலா 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஊதா தொப்பி:
ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பிக்கான பட்டியலில் தற்போது சென்னை அணி வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் 7 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆரஞ்சு தொப்பி:
ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பிக்கான பட்டியலில் தற்போது விராட் கோலி 181 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.