< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.2025: டெல்லி அணியில் தக்கவைக்கப்படும் முதல் வீரர் இவர்தான்.. வெளியான தகவல்

Image courtesy: IPL

கிரிக்கெட்

ஐ.பி.எல்.2025: டெல்லி அணியில் தக்கவைக்கப்படும் முதல் வீரர் இவர்தான்.. வெளியான தகவல்

தினத்தந்தி
|
21 Sept 2024 10:01 PM IST

அடுத்த வருட ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என சில மாதங்களாக தகவல் பரவி வந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து ஏலத்திற்கு முன்னதாகவே அவர் சிஎஸ்கே அணிக்கு மாறலாம் எனவும் வல்லுநர்கள் கருத்து கூறி இருந்தனர்.

ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியால் தக்க வைக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் டெல்லி அணி தக்கவைக்கும் வீரர்களில் முதல் வீரராக அவர் இருப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்