< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.2024; சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
கிரிக்கெட்

ஐ.பி.எல்.2024; சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
18 March 2024 9:10 AM IST

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

சென்னை,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 22ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்