< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐபிஎல் 2024; வீரர்கள் ஏலம் துபாயில் டிசம்பர் 19ம் தேதி நடைபெறும்...? - வெளியான புதிய தகவல்...!
|3 Nov 2023 8:41 PM IST
ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வரும் 26ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வரும் 15ம் தேதிக்கு பதில் 26ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அணி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.