ஐ.பி.எல். 2024; ஐதராபாத் அணிக்கு புதிய கேப்டன்..? - வெளியான தகவல்
|2024-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி துவங்க உள்ளது.
ஐதராபாத்,
2024-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் ஆடி வரும் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு செயல்பட்ட எய்டன் மார்க்ரமை இந்த சீசனுக்கான கேப்டன் பதவியில் மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவருக்கு பதிலாக இந்த சீசனுக்கான ஏலத்தில் ஐதராபாத் அணியில் ரூ.20.50 கோடிக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.