< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். 2024: அணிக்கு மேலும் வலு சேர்க்கும் லக்னோ...புதிய துணை பயிற்சியாளர் நியமனம்

image courtesy; AFP

கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: அணிக்கு மேலும் வலு சேர்க்கும் லக்னோ...புதிய துணை பயிற்சியாளர் நியமனம்

தினத்தந்தி
|
2 March 2024 11:56 AM IST

இவர் முன்னதாக ஐ.பி.எல். தொடரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளின் பயிற்சியாளர்கள் குழுவில் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

லக்னோ,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், அணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த சீசனுக்கு புதிய துணை பயிற்சியாளரை நியமித்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல் ரவுண்டர் லான்ஸ் க்ளூசனரை துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவர் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உடன் இணைந்து செயல்பட உள்ளார். இவரது வருகை லக்னோ அணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும்.

லான்ஸ் க்ளூசனர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்.ஏ.20 லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளின் பயிற்சியாளர்கள் குழுவில் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

மேலும் செய்திகள்