< Back
கிரிக்கெட்
ஐபிஎல் 2024; 12 வீரர்களை விடுவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

image courtesy; PTI

கிரிக்கெட்

ஐபிஎல் 2024; 12 வீரர்களை விடுவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

தினத்தந்தி
|
26 Nov 2023 9:49 PM IST

விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. அது இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷர்துல் தாக்கூர், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட 12 வீரர்களை விடுவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியிட்ட 12 வீரர்கள் விவரம் பின்வருமாறு;-

ஷர்துல் தாக்கூர், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்ய தேசாய், டேவிட் வீஸ், ஜெகதீசன், கெஜ்ரோலியா, பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஜான்சன் சார்லஸ், மந்தீப் சிங் ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.

மேலும் செய்திகள்