< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். 2024; பயிற்சியின்போது அர்ஜுன் பந்து வீச்சில் திணறிய இஷான் - வைரலாகும் வீடியோ
கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024; பயிற்சியின்போது அர்ஜுன் பந்து வீச்சில் திணறிய இஷான் - வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
13 March 2024 1:50 PM IST

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.

மும்பை,

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. அதில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கு பந்து வீசினார்.

அவர் வீசிய யார்க்கர் பந்தை அடிக்க முடியாமல் இஷான் திணறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்