ஐபிஎல் 2024: சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் விபரம்
|அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களின் வீரர்களை பரிமாற்றிக்கொள்ளலாம். மேலும், வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவிக்கலாம்.
இந்த நிலையில் அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா ஆகிய 8 வீரர்களை சென்னை அணி விடுவித்துள்ளது.
மேலும், டோனி, டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷாய்க் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னெர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மாண்டல், ஹேங்கர்கேகர், தீபக் சாஹர், தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சிம்ரன்ஜீத் சிங், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா ஆகிய வீரர்கள் தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.