< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். 2024: விழிப்புணர்வு ஜெர்சியிலும் மாற்றம் செய்த பெங்களூரு
கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: விழிப்புணர்வு ஜெர்சியிலும் மாற்றம் செய்த பெங்களூரு

தினத்தந்தி
|
21 March 2024 9:06 AM IST

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணி வீரர்கள் பசுமை மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பச்சைநிற ஜெர்சியை அணிந்து விளையாடுவது வழக்கம்.

பெங்களூரு,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் பசுமை மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒரு ஆட்டத்தில் பிரத்யேகமாக பச்சைநிற சீருடையை அணிந்து விளையாடுவது வழக்கம். இதன்படி இந்த சீசனுக்கான பச்சை நிற சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் பெங்களூரு கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்