< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். 2024: வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெறும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்

image courtesy: PTI

கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெறும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்

தினத்தந்தி
|
16 March 2024 8:31 PM IST

2024 ஐ.பி.எல். தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

சிட்னி,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான சுமித்தை கடந்த 2 வருடங்களாக எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் இவரால், ஐ.பி.எல்.-ல் நிலையான இடத்தை பெறமுடியவில்லை. இவர் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு டெல்லி அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பின் எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் சுமித் இந்த வருட ஐ.பி.எல். தொடரில் ஆங்கில வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார். இவருடன் ஹர்ஷா போக்லோ, சுனில் கவாஸ்கர், லட்சுமண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், நிக் நைட், பொம்மி பங்க்வா, டேனி மோரிசன், சைடன் டவுல், ஏபி டி வில்லியர்ஸ், மேத்யூ ஹெய்டன், தீப் தாஸ் குப்தா, அன்சும் சோப்ரா, இயன் பிஷப், ஆலன் வில்கின்ஸ், கெவின் பீட்டர்சன் ஆகியோர் ஆங்கில வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்