< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐபிஎல் 2024; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து ஹசரங்கா, ஹேசல்வுட், கேதர் ஜாதவ் உள்ளிட்ட 8 வீரர்கள் விடுவிப்பு!
|26 Nov 2023 7:30 PM IST
ஐபிஎல்-ன் 17-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. அது இன்றுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஜோஷ் ஹேசல்வுட், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், கேதர் ஜாதவ், பிரேஸ்வேல், பின் ஆலன், டேவிட் வில்லி, வெயின் பார்னல் ஆகிய 8 வீரர்களை விடுவித்துள்ளது.