ஐபிஎல் 2023: பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி முன்னேறும் என்று நான் நினைக்கவில்லை - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்
|2023 ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது.
மும்பை,
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. அன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்த வருட ஐபிஎல் தொடர் உள்ளூர்-வெளியூர் முறையில் நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வருட ஐபெல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி செல்லும் என நான் நினைக்கவில்லை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது,
டெல்லி அணியின் பிளேயிங் 11 என்ன?. பிரித்தி ஷாவுடன் டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார். 3வது வரிசையில் மிட்செல் மார்ஷ் ஏனென்றால் வார்னர் அல்லது பிரித்வியை 3வது வரிசையில் ஆட வைக்க முடியாது. அடுத்து 4வது வரிசையில் மனிஷ் பாண்டே. 5வது வரிசையில் ரோவ்மன் பவல் அல்லது ரீலி ரோசவ். 6வது வரிசையில் விக்கெட் கீப்பராக சர்பராஸ் கான் அல்லது வேறொரு விக்கெட் கீப்பர். நாம் இன்னும் டெல்லி அணியின் கீப்பர் யார் என்று அறியவில்லை.
நான் சர்ப்ராஸ் கான் என நினைக்கிறேன், ஆனால் எனக்கு தெரியவில்லை என்றார். மேலும், பந்துவீச்சில் அக்சர் பட்டேல் 7வது வரிசையிலும், 8வது வரிசையில் குல்தீப் யாதவும் இடம் பெறுவர். மேலும் கடைசி 3 இடங்களில் அவர்களிடம் இருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களில் 3 பேரை தேர்வு செய்ய வேண்டும். அதில் ஆன்ரிச் நோர்க்கியா, சேத்தன் சர்க்காரியா மற்றும் முகேஷ் குமார் அல்லது இஷாந்த் சர்மா.
ஐபிஎல் தொடக்க கட்டத்தில் இருந்து இன்னும் 3 அணிகள் தான் கோப்பையை வெல்லவில்லை (டெல்லி, பெங்களூர்ய், பஞ்சாப்). டெல்லி கோப்பை வரை நெருங்கி வந்துள்ளது. மற்ற அணிகளும் சில சமயங்களில் நெருங்கி வந்துள்ளன. ஆனால் இந்த முறை அவர்கள் அந்த இடத்துக்கு (பிளே ஆப்) நெருங்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வௌட ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகி உள்ள ரிஷப் பண்டுக்கு பதிலாக டெல்லி அணியை டேவிட் வார்னர் வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.