< Back
கிரிக்கெட்
ஐபிஎல் 2023: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு...!
கிரிக்கெட்

ஐபிஎல் 2023: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு...!

தினத்தந்தி
|
1 April 2023 7:08 PM IST

ஐபிஎல் தொடரின் இன்றைய 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி - லக்னோ அணிகள் மோதுகின்றன.

லக்னோ,

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில் இன்றைய 2வது லீக் ஆட்டத்தில் லக்னோ-டெல்லி அணிகள் ஆட உள்ளன.

ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதால் டெல்லி அணியை வார்னர் வழிநடத்துகிறார். இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

மேலும் செய்திகள்