< Back
கிரிக்கெட்
ஐபிஎல் போட்டி : கொரோனா தொற்று அதிகரிப்பு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
கிரிக்கெட்

ஐபிஎல் போட்டி : கொரோனா தொற்று அதிகரிப்பு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

தினத்தந்தி
|
6 April 2023 12:50 PM IST

நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தச் சூழலில் அணிகளும், வீரர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி

இந்தியவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 10 ஐபிஎல் அணிகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தச் சூழலில் அணிகளும், வீரர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறி இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம், ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை, கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வீரர்களையும் உதவி ஊழியர்களையும் நாங்கள் வழிநடத்தியுள்ளோம். வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியம். அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். எங்கள் குழு நிலைமையை கண்காணித்து வருகிறது என கூறப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,335 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் 25,587 பேர் தொற்று பாதிப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்லி, மராட்டியம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளர்.

நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஐபிஎல் சீசன்கள் பயோ - பபூள் முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்