< Back
கிரிக்கெட்
ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் அறிவிப்பு

Image Courtesy: PTI  

கிரிக்கெட்

ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் அறிவிப்பு

தினத்தந்தி
|
9 Nov 2022 5:56 PM IST

ஐபிஎல் மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மும்பை,

உலக கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற முன்னணி கிரிக்கெட் தொடர்களில் ஐ.பி.எல் தொடரும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு குஜராத், லக்னோ ஆகிய 2 அணிகள் ஐபிஎல் தொடரில் அறிமுகமான காரணத்தால் அதற்காக மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி-ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 23ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் ஐபிஎல் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்