< Back
கிரிக்கெட்
இந்தூர் டெஸ்ட்: ரசிகருக்காக சிராஜ் செய்த செயல் - வைரலாகும் வீடியோ...!
கிரிக்கெட்

இந்தூர் டெஸ்ட்: ரசிகருக்காக சிராஜ் செய்த செயல் - வைரலாகும் வீடியோ...!

தினத்தந்தி
|
3 March 2023 5:03 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. சுழலுக்கு சொர்க்கபுரியாக திகழும் இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 109 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 76.3 ஓவர்களில் 197 ரன்னில் அடங்கியது.

இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா மீண்டும் சொதப்பியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து. மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 64 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சிறிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 3-வது நாளான இன்று களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை இழக்காமால் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியின் போது பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது எனர்ஜி பானத்தை ( குளிர் பானம்) கொடுத்து ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ரசிகர்களிடம் பேசிக்கொண்டு, அவருக்கு குளிர்பானம் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Related Tags :
மேலும் செய்திகள்