< Back
கிரிக்கெட்
இந்தியாவின் டி வில்லியர்ஸ் சூர்யகுமார் யாதவ் - டேல் ஸ்டெய்ன் கருத்து
கிரிக்கெட்

'இந்தியாவின் டி வில்லியர்ஸ் சூர்யகுமார் யாதவ்' - டேல் ஸ்டெய்ன் கருத்து

தினத்தந்தி
|
13 Oct 2022 10:42 AM IST

இந்தியாவின் டி வில்லியர்ஸ் சூர்யகுமார் யாதவ் என்று டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2022 டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 23-ம் தேதி எதிர்கொள்கிறது.

இதனிடையே, உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் காயம் காரணமாக பல வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி வருகின்றனர். இதனால், இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டேல் ஸ்டெய்ன் கூறியதாவது:-

"சூர்யகுமார் யாதவ் ஒரு அற்புதமான வீரர், மைதானத்தை சுற்றிலும் ஷாட்களை அடிக்கும் திறன் கொண்டவர். இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி விக்கெட் கீப்பருக்கு பின்புறம் பந்தை விளாச விரும்புகிறார். அவர் எனக்கு ஏபி டி வில்லியர்ஸை நினைவுபடுத்துகிறார். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் டி வில்லியர்ஸ். டி20 உலகக்கோப்பையில் அவர் கவனிக்ககூடிய வீரராக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்