< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை: சற்று நேரத்தில் இந்திய அணி அறிவிப்பு..! யார் யார் இடம் பெறுவார்கள்..?
கிரிக்கெட்

ஆசிய கோப்பை: சற்று நேரத்தில் இந்திய அணி அறிவிப்பு..! யார் யார் இடம் பெறுவார்கள்..?

தினத்தந்தி
|
21 Aug 2023 1:31 PM IST

ஆசிய கோப்பை போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது.

மும்பை

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. உலக கோப்பைக்கு தேவையான அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன. இந்திய அணி இன்று மதியம் அறிவிக்கபடும் என கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு இன்று மதியம் 12 மணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, சற்று நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது, அதில் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும்.

ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்படும் அணி அடுத்த உலகக் கோப்பைக்கும் மிக முக்கியமானதாக இருக்கும்.

அணியில் வாய்ப்புள்ள வீரர்கள் வருமாறு:- ரோஹித் சர்மா (சி), ஷுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், விராட் கோலி, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.

ஷ்ரேயாஸ் ஐயர் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக இல்லாததால், அவர் இந்தப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட சந்தேகம்தான். கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேனாக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்