ஆஸ்திரேலிய பெண்கள் அணி சாதனையை முறியடித்த இந்திய பெண்கள் அணி
|ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
பல்லேகல்லே,
இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக காஞ்சனா 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷவாலி வர்மா-மந்தானா ஆடினர். 25.4 ஓவரில் இந்திய அணி விக்கெட் ஏதும் விட்டுக் கொடுக்காமல் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷவாலி வர்மா 71 ரன்னிலும் மந்தனா 94 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது விக்கெட் இழப்பின்றி அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் சாதனையை இந்திய பெண்கள் அணி தகர்த்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 164 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை இந்திய பெண்கள் அணி முறியடித்துள்ளனர். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி விக்கெட் இழப்பின்றி 146 ரன்கள் எடுத்ததே அதிக ரன்னாக இருந்தது.