தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி - முழு விவரம்
|இந்திய அணி நவம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
மும்பை,
2024-25 ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் சர்வதேச போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ நேற்று வெளியிட்டது. இந்நிலையில் இந்திய அணி நவம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளதாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 4 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் நவம்பர் 8 முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரின் முதல் ஆட்டம் நவம்பர் 8ம் தேதி டர்பனிலும், 2ம் ஆட்டம் நவம்பர் 10ம் தேதி க்கெபெர்ஹாவிலும், 3ம் ஆட்டம் நவம்பர் 13ம் தேதி செஞ்சுரியனிலும், 4ம் ஆட்டம் நவம்பர் 16ம் தேதி ஜோகன்பர்க்கிலும் நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.