< Back
கிரிக்கெட்
இங்கிலாந்தில் இந்திய அணி பயிற்சி கிரிக்கெட் - கோலி அரைசதம்
கிரிக்கெட்

இங்கிலாந்தில் இந்திய அணி பயிற்சி கிரிக்கெட் - கோலி அரைசதம்

தினத்தந்தி
|
26 Jun 2022 3:32 AM IST

லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 3-வது நாள் முடிவில் 92 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் குவித்தது.

லீசெஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் 2 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3-வது நாள் முடிவில் 92 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் குவித்தது.

அரைசதம் கடந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி 67 ரன்கள் (98 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் பும்ராவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். ரவீந்திர ஜடேஜாவும் (56 ரன்) அரைசதம் அடித்தார். இதன் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்