< Back
கிரிக்கெட்
புதிய ஜெர்சியில் கலக்கும் இந்திய அணி வீரர்கள் - வைரலாகும் புகைப்படம்
கிரிக்கெட்

புதிய ஜெர்சியில் கலக்கும் இந்திய அணி வீரர்கள் - வைரலாகும் புகைப்படம்

தினத்தந்தி
|
29 May 2024 10:08 PM IST

இந்திய அணி வீரர்கள் நியூயார்க்கில் தங்களது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர்

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க்கில் தங்களது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர்

முன்னதாக உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் , புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்