ஜிம்பாப்வேவுக்கு புறப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி
|இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
மும்பை,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் விளையாட உள்ளதால் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த அணியில் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக், துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு இடம் கிடைத்தது. அது தவிர்த்து டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் மட்டுமே இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களோடு பல்வேறு இளம் வீரர்களுக்கு இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு புறப்பட்டு சென்றதை பிசிசிஐ தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஏற்கனவே அறிவித்தபடி விவிஎஸ் லட்சுமண் உடன் பயணிக்கிறார்.