< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

image courtesy; AFP

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

தினத்தந்தி
|
30 Nov 2023 8:41 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை ரோகித் வழிநடத்த உள்ளார். மேலும் விராட் கோலி டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் அணி; ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் , கேஎல் ராகுல் , ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது. ஷமி, ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 அணி ; யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் , ஜிதேஷ் சர்மா , ரவீந்திர ஜடேஜா , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் , அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஒருநாள் அணி; ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்) , சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். , முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

மேலும் செய்திகள்