< Back
கிரிக்கெட்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !

கோப்புப்படம் 

கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !

தினத்தந்தி
|
30 July 2022 8:43 PM IST

இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

மும்பை,

இந்திய அணி தற்போது வெண்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ள நிலையில் இரண்டாவது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்த தொடரை முடித்த பிறகு இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி அடுத்தமாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஷிகர் தவன் தலைமையில் இந்திய இளம் அணி ஜிம்பாப்வேயை எதிகொள்ள உள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்; ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ.), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.

மேலும் செய்திகள்