< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி விட்டு அணியில் இருந்து வெளியேறும் இந்திய வீரர் - வெளியான தகவல்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி விட்டு அணியில் இருந்து வெளியேறும் இந்திய வீரர் - வெளியான தகவல்

தினத்தந்தி
|
17 Dec 2023 10:41 AM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

ஜோகன்ஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி விட்டு டெஸ்ட் தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்திய டெஸ்ட் அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 20-ந் தேதி தொடங்கும் டெஸ்ட் அணியினருக்கான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் அவர் 2-வது, 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்