< Back
கிரிக்கெட்
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஜெய்ஸ்வால்
கிரிக்கெட்

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஜெய்ஸ்வால்

தினத்தந்தி
|
12 March 2024 3:47 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்ததற்காக ஜெய்ஸ்வால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாய்,

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி. அறிவித்தது. சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் முன்னணி வீரரான வில்லியம்சன், இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசங்கா ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்