< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆண் குழந்தைக்கு தந்தையானார் இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்டியா
|24 July 2022 6:21 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்ட்யா ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
அகமதாபாத்,
இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரருமான க்ருணால் பாண்ட்யா கடந்த 2017ஆம் ஆண்டு பன்குரி சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் க்ருணால் பாண்ட்யா - பன்குரி சர்மா தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து க்ருணால் பாண்ட்யா, தனது குழந்தைக்கு முத்தமிடும் புகைப்படத்தை படத்தை டுவீட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், கவிர் க்ருணால் பாண்ட்யா என தங்கள் குழந்தைக்கு பெயரிட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆண் குழந்தைக்கு தந்தையான க்ருணால் பாண்ட்யாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Kavir Krunal Pandya pic.twitter.com/uitt6bw1Uo
— Krunal Pandya (@krunalpandya24) July 24, 2022