< Back
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஆண் குழந்தை...!!

image copurtesy; instagram/ jaspritb1

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஆண் குழந்தை...!!

தினத்தந்தி
|
4 Sept 2023 11:50 AM IST

ஜஸ்பிரித் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அகமதாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க போட்டியில் பும்ரா அணியில் இடம்பெற்றிருந்தாலும், இரண்டாவது பாதியில் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டதால் பந்து வீச முடியவில்லை.

பின்னர், நேபாளத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி மும்பை திரும்பியுள்ளார் என்ற செய்தி வெளியானது.

இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அவருடைய மனைவி சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில்,

"எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நிறைவாக உள்ளன. இன்று காலை நாங்கள் எங்கள் குழந்தை அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவிற்கு மேல் இருப்பது போன்று உணர்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயம் கொண்டு வரும் எல்லாவற்றிற்கும் காத்திருக்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.

பும்ரா ஆசிய கோப்பை தொடரின் 'சூப்பர்4'சுற்றில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்