< Back
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு? - வெளியான தகவல்

image courtesy; AFP / X

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
17 July 2024 4:13 PM IST

இன்று நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித், கோலி, ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தேர்வுக்குழுவின் சில உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த தேர்வுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்