< Back
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் புதிய யோசனை..!
கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் புதிய யோசனை..!

தினத்தந்தி
|
29 Sept 2023 4:37 PM IST

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிக தூரம் அடிக்கும் சிக்ஸர்களுக்கு அதிக ரன்கள் வழங்கும் புதிய யோசனை ஒன்றை தெரிவித்து உள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனியார் யூடியூப் சேனல் நடத்திய விழாவில் கலந்து கொண்டார்.

இதில் அவர் கூறியதாவது, ஒரு வீரர் 90 மீட்டருக்கு மேல் சிக்ஸர் அடித்தால் அதற்கு 8 ரன்களும் , 100 மீட்டருக்கு மேல் அடித்தால் அதற்கு 10 ரன்களும் வழங்க வேண்டும். பேட்டர்கள் எவ்வளவு தூரம் சிக்ஸர் அடித்தாலும் அதற்கு 6 ரன்கள் வழங்கப்படுவது நியாயமாக தெரியவில்லை. இது கிறிஸ் கெயில் போன்ற வீரர்களுக்கு நியாயமற்ற செயல் ஆகும், என்றார்.

தற்போது உலக அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 551 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்