< Back
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் விராட் கோலியை  நம்பியிருக்கிறது - சவுரவ் கங்குலி
கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் விராட் கோலியை நம்பியிருக்கிறது - சவுரவ் கங்குலி

தினத்தந்தி
|
27 Jan 2023 12:21 PM IST

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலியை நம்பியிருக்கிறது, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட வேண்டும் என கங்குலி கூறினார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. இவர் கடந்த சில வரடங்களாக பார்ம் இன்றி தவித்து வந்தார். அவரை பல்வேறு முன்னாள் வீரர்கள் அவரை விமர்சனம் செய்து வந்தனர். இதையடுத்து அவர் கடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்து பார்முக்கு வந்தது மட்டுமின்றி தனது திறமையை உலகிற்கு நிரூபித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த பின்னர் அடுத்தடுத்து சதங்களை அடித்து மீண்டும் பழைய பார்முக்கு திரும்பினார் கோலி. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனது பழைய பார்முக்கு திரும்பிய கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் தனது பழைய பார்முக்கு திரும்ப முடியாமல் உள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலியை நம்பியுள்ளது. அதனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

"விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார். வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்பட்டார். இந்திய கிரிக்கெட் அணி அவரை நம்பியிருப்பதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆஸ்திரேலிய தொடர் விரைவில் வரவுள்ளது, அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.

இந்திய தரப்பு மிகவும் பலமாக உள்ளது. இந்தியா மோசமான அணியாக இருக்க முடியாது. நம் நாட்டில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அதிகம். போட்டி அதிகம் என்பதால் அவர்களில் பாதி பேருக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த அணி உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகக் கோப்பை வரை இந்த அணியை தேர்வாளர்களும் ராகுல் டிராவிட்டும் ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகக் கோப்பையில் அவர்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம், அவர்கள் நன்றாக விளையாட வேண்டும்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

மேலும் செய்திகள்