கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் - காரணம் என்ன...?
|இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர் .
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன .
.இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் நிகழ்வாகும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர் .
மேலும் போட்டி தொடங்கும் முன் இரு அணி வீரர்களும் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.