< Back
கிரிக்கெட்
இந்தியா-ஜிம்பாப்வே 20 ஓவர் கிரிக்கெட் தொடர்; இன்று 4-வது ஆட்டம்
கிரிக்கெட்

இந்தியா-ஜிம்பாப்வே 20 ஓவர் கிரிக்கெட் தொடர்; இன்று 4-வது ஆட்டம்

தினத்தந்தி
|
13 July 2024 5:51 AM IST

இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஹராரே,

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 100 ரன், 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இன்று மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது.

ஜிம்பாப்வே: வெஸ்லி மாதவெரே, டாடிவான்சே மருமானி, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன் ), ஜோனதன் கேம்ப்பெல், கிளைவ் மடான்டே, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் என்கராவா, சதரா.

மேலும் செய்திகள்