இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு
|இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்பட உள்ளனர்.
மும்பை,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இங்கிலாந்தில் இந்தியா மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்ஹாமில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது டி20 செப்டம்பர் 13 ஆம் தேதியும், செப்டம்பர் 15-ம் தேதி பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் 3வது போட்டியும் நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து செப்டம்பர் 18-ல் தொடங்கும் ஒருநாள் போட்டி செப்டம்பர் 24-ல் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வடிவிலான தொடர்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படவுள்ளார்.
இந்திய டி20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்னே ராணா, ரேணுகா தாக்கூர், மேக்னா சிங், ராதா யாதவ், சபினேனி மேகனா, தன்னா ), ராஜேஸ்வரி கயக்வாட், தயாளன் ஹேமலதா, சிம்ரன் தில் பகதூர், ரிச்சா கோஷ் , கே.பி. நவ்கிரே
இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, சபினேனி மேகனா, தீப்தி சர்மா, தனியா சப்னா பாட்டியா , யாஸ்திகா பாட்டியா , பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ரேணுகா தாகூர் சிங், ராஜேஸ்வரி கயக்வாட், ஹர்லீன் தியோல், தயாளன் ஹேமலதா, சிம்ரன் தில் பகதூர், ஜூலன் கோஸ்வாமி, ஜெமிமா ரோட்ரிக்ஸ்